வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் அமர்ந்திருந்தாராம். அப்போது அப்பகுதியில் குடிநீர் குழாய் லைன் பதிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சரவணன் (34) என்பவர் வந்து, இளம்பெண்ணிடம்குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் கொண்டுவர வீட்டின் உள்ளே சென்ற அவரை பின்தொடர்ந்த சரவணன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் இளம்பெண்ணுக்கு வலிப்பு ஏற்பட்டு துடித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால், சரவணன் தப்பி ஓடிவிட்டார். பின்னர் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண் நேற்று தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தார்.
