திருச்சியில் கை, கால்களை கட்டி பலாத்காரம் செய்து பெண் கொலை: நிர்வாண கோலத்தில் உடல் முட்புதரில் வீச்சு

லால்குடி: திருச்சி அருகே கை, கால்களை கட்டி பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொன்று உடலை ஏரியின் முட்புதரில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு இளம்பெண் தனது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள மாட்டு கொட்டகைக்கு மாட்டுக்கு வைக்கோல் போட சென்றவர் வீடு திரும்பவில்லை.

இரவு வீட்டுக்கு வந்த கணவன், குழந்தைகளிடம் அம்மா எங்கே என கேட்டுள்ளார். மாட்டு கொட்டைக்கு சென்றவர் இன்னும் வரவில்லை என குழந்தைகள் தெரிவித்தனர். இதனால் மாட்டு கொட்டகைக்கு மனைவியை தேடி சென்றார். அங்கும் மனைவி இல்லாததால் அக்கம் பக்கத்தில் தேடினார். நள்ளிரவு வரை தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பெண்ணின் கணவன் காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.

அதன் பேரில் காணக்கிளியநல்லூர் போலீசார் மோப்பநாய் உதவியுடன் சிறுகளப்பூர் ஏரி பகுதியில் தேடி பார்த்தனர். பின்னர் புள்ளம்பாடி மற்றும் லால்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் பரிசல் மூலமாக ஏரியின் உட்பகுதியில் உள்ள தண்ணீரில் தேடினர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் ஏரியின் தண்ணீர் பகுதியில் உள்ள முட்புதரில் சென்று தேடினர்.

அப்போது, நிர்வாண கோலத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது. இதையடுத்து, உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்து, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து திருச்சி மாவட்ட எஸ்பி டோங்ரோ பிரவீன் உமேஷ், லால்குடி டிஎஸ்பி ராஜமோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சிறுகளப்பூர் சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரித்தனர்.

இதில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, சிறுகளப்பூர் பகுதிகளில் உள்ள கிரஷர் நிறுவனங்கள் மற்றும் காற்றாலை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: