சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் நியமனத்தை ரத்து செய்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், செந்தில்குமார் அமர்வு உத்தரவிட்டுள்ளது. விதிகளை பின்பற்றி நீதிபதிகள் உதவியாளர் நியமன நடைமுறைகளை மேற்கொள்ளவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ’17 பேர் நியமிக்கப்பட்ட தேர்வு நடைமுறைகளில் முறைகேடு என தாமாக முன்வந்து ஐகோர்ட் வழக்கு தொடர்ந்துள்ளது. திறன் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டு, சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற 2 ஆண்டு அவகாசம். விதிகளின்படி உரிய தகுதியை பெறுவதற்காக 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பணிகளில் உள்ளவர்கள் தகுதி பெறவில்லை என்றால் நேரடி தேர்வு முறையை பின்பற்ற வேண்டும். விதிகளை பின்பற்றாமல் நியமனம் மேற்கொள்வது மக்கள் மத்தியில் தவறான செய்தியை கொண்டு சேர்க்கும்’ என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
