×

கொல்கத்தா மெட்ரோவில் 2 தற்கொலை முயற்சி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் காளிகாட் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று காலை 7.20 மணியளவில் மெட்ரோ ரயிலுக்காக ஏராளமானோர் காத்திருந்தனர். அப்போது ஒரு பயணி ரயில் வரும்போது தண்டவாளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் 7.50 மணிக்கு மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. இதேபோல், நேற்று பிற்பகல் 3.09 மணியளவில, பெல்காச்சியா மெட்ரோ ரயில் நிலையத்தின் டவுன் லைனில், பயணி ஒருவர் தண்டவாளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கும் உடனே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பின்னர் 3.56 மணிக்கு இயல்பான சேவைகள் மீண்டும் தொடங்கின.

Tags : Kolkata Metro ,Kolkata ,Kalighat Metro station ,Kolkata, West Bengal ,
× RELATED திரிணாமுல், ஆம்ஆத்மி, உத்தவ் சிவசேனா...