புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை 7.04 மணி அளவில் ஜூர்ம் பகுதிக்கு தெற்கே 215 கிமீ ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது. இதைத் தொடர்ந்து டெல்லி என்சிஆர் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பலத்த நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். ஆனாலும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
