×

வீட்டை பெற்றுக் கொண்ட பிறகும் தாமத ஒப்படைப்பு இழப்பீட்டை வீடு வாங்குபவர்கள் கோரலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: வீட்டை பெற்றுக் கொண்ட பிறகும் தாமதமான ஒப்புடைப்புக்கான இழப்பீட்டை வீடு வாங்குபவர் கோரலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. டெல்லியில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் ஜனவரி 2003ல் உறுப்பினராக சேர்ந்து வீடு ஒதுக்கப்பட்ட நபர் ஒருவர், தான் வீட்டை பணம் கொடுத்து வாங்கி பெற்றுக் கொண்ட பிறகு சில பணிகளை முடித்துதர தாமதமாக்கியதை எதிர்த்து தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், வழக்கை நுகர்வோர் சட்டத்தின் கீழ் விசாரிக்காமல் கடந்த 2016ல் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், வி.மோகனா ஆகியோர் அமர்வு விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. அதில், வீட்டின் உரிமையைப் பெற்றுக் கொண்டதால் மட்டுமே ஒரு வாங்குபவரின் இழப்பீடு கோரும் உரிமை பறிபோகாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

‘‘வீடு வாங்குபவர் வீட்டைத் தங்களின் வசம் எடுத்துக்கொண்ட பிறகும், கட்டுமானத் தாமதத்திற்கான இழப்பீட்டைக் கோர முழு அதிகாரம் உண்டு. வீட்டைப் பெற்றுக் கொண்டதால் அவர் ‘நுகர்வோர்’ என்ற தகுதியை இழக்க மாட்டார்’’ என கூறிய நீதிபதிகள், நுகர்வோர் வீட்டைப் பெற்றுக்கொண்டால் அவர் நுகர்வோர் நல்வாழ்வு நீதிமன்றங்களை அணுக முடியாது என்று தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தனர். மேலும், துவாரகா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இந்த வழக்கை ஒரு வருடத்திற்குள் விசாரித்து முடிக்கவும் தீர்ப்பில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Tags : Supreme Court ,New Delhi ,Delhi ,
× RELATED திரிணாமுல், ஆம்ஆத்மி, உத்தவ் சிவசேனா...