கொல்கத்தா: கொல்கத்தாவில் தரதலா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த சேமிப்பு கிடங்கு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மீட்பு பணிகள் நான்காவது நாளாக நேற்று தொடர்ந்த நிலையில்,இடிபாடுகளில் எஞ்சியிருப்பவர்களைத் தேடும் பணியில் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டன.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலேக் சர்தார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மேலும் 17 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
