2023-24ம் ஆண்டு இளங்கலை மாணவர் சேர்க்கை சென்னை மாநிலக்கல்லூரி இந்த ஆண்டும் முதலிடம்: 3 லட்சம் பேர் போட்டி போட்டு விண்ணப்பம்

சென்னை: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவை கடந்த மே 8ம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். //www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர். மே 19ம் தேதியுடன் நிறைவு பெறுவதாக இருந்த விண்ணப்ப பதிவை, மாணவர்கள் நலன்கருதி மே 22ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, 3 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அதிக அளவிலான விண்ணப்பங்களை பெற்று சென்னை மாநிலக் கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியும், 3ம் இடத்தில் சென்னை, வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியும் உள்ளன.

இதுகுறித்து சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் கூறியதாவது: ஒரு மாணவன் ஒரே கல்லூரியில் பல படிப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு செய்வார். அதன்படி, 1,140 இடங்களுக்கு கடந்த ஆண்டு மாநில கல்லூரிக்கு 95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன. இந்த ஆண்டு 1,20,304 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது தமிழ்நாட்டில் வேறு எந்த அரசு கல்லூரிக்கும் வராத எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள். கடந்த ஆண்டைவிட கூடுதலாக 25,000 விண்ணப்பங்கள் மாநிலக் கல்லூரிக்கு வந்துள்ளன.

ஒரு இடத்திற்கு 106 பேர் போட்டியிட்டுள்ளனர். பி.காம் மற்றும் வேதியியல் படிப்பிற்கு அதிக அளவிலான விண்ணப்பங்கள் வந்துள்ளன. தமிழ் துறைக்கு 9 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதற்கு காரணம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். தமிழ்மொழிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த துறைக்கு தற்போது மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு தமிழ் பேராசிரியராக எனக்கும் இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த வருடமும் பி.காம் (பொது), பி.எஸ்சி, கம்ப்யூட்டர் படிப்பிற்கே மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். இதை தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 29ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், முதல் பொது கலந்தாய்வு ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும், இரண்டாம் பொது கலந்தாய்வு ஜூன் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் நடக்கிறது. தொடர்ந்து, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ம் தேதி தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை தயார் செய்த தரவரிசை பட்டியலின் அடிப்படையில்:
கல்லூரிகள் மொத்த இடங்கள் பெறப்பட்ட விண்ணப்பங்கள்
சென்னை மாநிலக் கல்லூரி 1,140 40,030
கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரி 1,433 34,743
வியாசர்பாடி அரசு கலைக்கல்லூரி 829 29,260
சென்னை ராணிமேரி கல்லூரி 1484 24256

சென்னை கல்லூரிகள்
ஆர்.கே.நகர்
அரசு கலை மற்றும் அறிவியல் 590 இடங்களுக்கு
20,141 விண்ணப்பங்கள்
காயிதே மில்லத் மகளிர் கல்லூரி 968 இடங்களுக்கு
19,154 விண்ணப்பங்கள்
நந்தனம் அரசு ஆண்கள்
கலைக்கல்லூரி 1132இடங்களுக்கு
181,27 விண்ணப்பங்கள்
பாரதி பெண்கள் கல்லூரி 1260 இடங்களுக்கு
17,940 விண்ணப்பங்கள்
திருவொற்றியூர் அரசு கலை
மற்றும் அறிவியல் கல்லூரி 330 இடங்களுக்கு
3,839 விண்ணப்பங்கள்

சென்னை மாநில கல்லூரியில் விண்ணப்ப பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை
2021-22 2022-23 2023-24
53,668 95,143 1,20,304

The post 2023-24ம் ஆண்டு இளங்கலை மாணவர் சேர்க்கை சென்னை மாநிலக்கல்லூரி இந்த ஆண்டும் முதலிடம்: 3 லட்சம் பேர் போட்டி போட்டு விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: