உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்: ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ..ரஹானேவுக்கு வாய்ப்பு..!!

டெல்லி: உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்ட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ரஹானே டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். சுப்மான் கில், புஜாரா, கோலி, கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத், அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

அக்சர் படேல், சர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் உள்ளிட்டோரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனட் கட்டிற்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ஜூன் 7ம் தேதி இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது. 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

The post உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்: ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ..ரஹானேவுக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: