எல்லை வரையறை, மகளிர் 33% ஒதுக்கீடு அமலாவதால் மக்கள் தொகை கணக்கெடுப்பு காலக்கெடு 9வது முறையாக நீடிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் மாவட்டங்கள் உள்ளிட்ட எல்லைகளை வரையறை செய்தல், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு போன்ற காரணங்களால் மக்கள் தொகை கணக்கெடுப்பு 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ல் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் கடந்த 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போது கொரோனா தொற்று வேகமாக பரவியதால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தொடர்ந்து பலமுறை மக்கள் தொகை கணக்கெடுப்புகாான காலக்கெடு நீடிக்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்னதாக நாடு முழுவதும் மாவட்டம், தாலுகா, நகர்ப்புற-கிராமப்புற பகுதிகளை வரையறுப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ெபாதுவாக எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்காக அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழு பயிற்சி அளிக்கப்படும். அதன்பின்னரே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இதற்கிடையே மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் இயற்றப்பட்டதால், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மாவட்டங்கள் உள்ளிட்ட எல்லைகளை பதிவு செய்வதற்கான காலக்கெடு மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தாண்டு அக்டோபருக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாது என்பது உறுதியாகிவிட்டது. மக்கள் கணக்கெடுப்பு காலக்கெடு நீட்டிக்கப்படுவது இது 9வது முறையாகும் என்று ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post எல்லை வரையறை, மகளிர் 33% ஒதுக்கீடு அமலாவதால் மக்கள் தொகை கணக்கெடுப்பு காலக்கெடு 9வது முறையாக நீடிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: