நேற்று அந்த அணி 162 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. கீகன் பீட்டர்சன் 45, பெடிங்காம் 32, எட்வர்ட் மோர் 23, ஜுபேர் ஹம்சா 22 ரன் எடுத்தனர். ஹென்றி, சான்ட்னர் தலா 3, ஜேமிசன், ரச்சின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 349 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசி. 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்துள்ளது (43 ஓவர்). வில்லியம்சன் மீண்டும் சதம் விளாசி அசத்தினார்.
அவர் 109 ரன் (132 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பிரேண்ட் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். கான்வே 29, ரச்சின் 12, லாதம் 3 ரன்னில் ஆட்டமிழந்தனர். டேரில் மிட்செல் 11, பிளண்டெல் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க நியூசி. 528 ரன் முன்னிலையுடன் நியூசி. வலுவான நிலையில் உள்ளது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
* வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் தனது 31வது சதத்தை பதிவு செய்துள்ளார். அவர் கடைசி 6 டெஸ்டில் (10 இன்னிங்ஸ்) 6 சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* டெஸ்டில் 31 சதம் என்ற மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் 165 போட்டிகளில் எட்டி முதலிடம் வகிக்கிறார். ஆஸி. வீரர் ஸ்டீவன் ஸ்மித், நியூசி.யின் வில்லியம்சன் இருவரும் 170 போட்டிகளில் 31 சதம் விளாசி அடுத்த இடத்தில் உள்ளனர். ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் 174 போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
* ஒரு டெஸ்டில் 2 சதம் விளாசிய 5வது நியூசி. வீரர் என்ற சாதனை வில்லியம்சன் வசமாகி உள்ளது.
* தற்போது டெஸ்ட் களத்தில் இருக்கும் வீரர்களில் ஸ்மித் (32 சதம்), வில்லியம்சன் (31 சதம்), ஜோ ரூட் (30 சதம்), விராத் கோஹ்லி (29 சதம்) ஆகியோர் அதிக சதம் அடித்து முன்னிலை வகிக்கின்றனர்.
The post மீண்டும் சதம் விளாசினார் வில்லியம்சன்: நியூசி. வலுவான முன்னிலை appeared first on Dinakaran.