டோனி டி சோர்ஸி 177 ரன் (269 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன் (198 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), டேவிட் பெடிங்காம் 59 ரன் (78 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் மார்க்ரம் 33, ரிக்கெல்டன் 12 ரன் எடுக்க, கைல் வெர்ரைன் டக் அவுட்டானார். வியான் முல்டர் 105 ரன் (150 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), செனுரன் முத்துசாமி 68 ரன்னுடன் (75 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 55.2 ஓவரில் 5 மெய்டன் உள்பட 198 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார். நகித் ராணா 1 விக்கெட் எடுத்தார். அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 9 ஓவரில் 38 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், போதிய வெளிச்சமில்லாததால் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஷத்மன் 0, ஹசன் ஜாய் 10, ஜாகிர் ஹசன் 2, ஹசன் மகமூத் 3 ரன்னில் ஆட்டமிழந்தனர். மோமினுல் ஹக் 6 ரன், கேப்டன் ஷான்டோ 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். தென் ஆப்ரிக்கா பந்துவீச்சில் ரபாடா 2, பேட்டர்சன், மகராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
The post 3 வீரர்கள் அபார சதம் தென் ஆப்ரிக்கா 575/6 டிக்ளேர்: வங்கதேசம் திணறல் appeared first on Dinakaran.