இலங்கையுடன் 3வது ஒருநாள் வெஸ்ட் இண்டீசுக்கு ஆறுதல் வெற்றி: லூயிஸ் அதிரடி சதம்

பல்லெகெலே: இலங்கை அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் விதி) ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. இலங்கை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டி (பகல்/இரவு) கனமழை காரணமாக பாதிக்கப்பட்டது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச… இலங்கை அணி 23 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவித்தது. பதும் நிசங்கா 56, அவிஷ்கா பெர்னாண்டோ 34, குசால் மெண்டிஸ் 56* ரன் (22 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டிஎல்எஸ் விதிப்படி 23 ஓவரில் 195 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. பிராண்டன் கிங் 16, கேப்டன் ஷாய் ஹோப் 22 ரன்னில் வெளியேறிய நிலையில், எவின் லூயிஸ் – ஷெர்பேன் ரூதர்போர்டு ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் 22 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்து வென்றது.

எவின் லூயிஸ் 102 ரன் (61 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), ரூதர்போர்டு 50 ரன்னுடன் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. எவின் லூயிஸ் ஆட்ட நாயகன் விருதும், இலங்கையின் சரித் அசலங்கா தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

The post இலங்கையுடன் 3வது ஒருநாள் வெஸ்ட் இண்டீசுக்கு ஆறுதல் வெற்றி: லூயிஸ் அதிரடி சதம் appeared first on Dinakaran.

Related Stories: