இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

மெக்கே: இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி (4 நாள், அதிகாரப்பூர்வமற்றது), கிரேட் பேரியர் ரீஃப் அரங்கில் இன்று காலை 5.30க்கு தொடங்கி நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் (5 போட்டி) நவ. 22ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியா சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் (4 நாள் ஆட்டம்) விளையாடுகிறது.

இந்தியா – இந்தியா ஏ மோதும் பயிற்சி ஆட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (பெர்த், நவ.15-17). இந்த நிலையில். இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ மோதும் முதல் டெஸ்ட் மெக்கே, கிரேட் பேரியர் ரீஃப் அரங்கில் இன்று தொடங்குகிறது. இதில் ஆல் ரவுண்டர் நாதன் மெக்ஸ்வீனி தலைமையிலான ஆஸ்திரேலியா ஏ அணியுடன் இந்தியா ஏ பலப்பரீட்சை நடத்துகிறது.

ருதுராஜ் தலைமையிலான இந்தியா ஏ அணியில் அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், இந்திரஜித், படிக்கல், நிதிஷ் குமார், மானவ் சுதர், தனுஷ் கோடியன் உள்பட இளம் வீரர்கள் பலரும் திறமையை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் இஷான் கிஷனும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க முயற்சிக்கலாம்.

* இந்தியா ஏ: ருதுராஜ் கெயிக்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), அபிஷேக் போரெல், கலீல் அகமது, ரிக்கி புய், பாபா இந்திரஜித், இஷான் கிஷன், தனுஷ் கோடியன், முகேஷ் குமார், நிதிஷ் குமார் ரெட்டி, தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன், நவ்தீப் சைனி, மானவ் சுதர், யாஷ் தயாள்.

* ஆஸ்திரேலியா ஏ: நாதன் மெக்ஸ்வீனி (கேப்டன்), கேமரூன் பேங்க்ராப்ட், ஸ்காட் போலண்ட், ஜார்டன் பக்கிங்காம், கூப்பர் கானல்லி, ஆலிவர் டேவீஸ், மார்கஸ் ஹாரிஸ், சாம் கோன்ஸ்டாஸ், நாதன் மெக்காண்ட்ரூ, டாட் மர்பி, மைகேல் நெசர், பெர்குஸ் ஓ’நீல், ஜிம்மி பியர்சன், ஜோஷ் பிலிப், கோரி ரோச்சிசியோலி, மார்க் ஸ்டெகடீ, பியூ வெப்ஸ்டர்.

The post இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: