வீலிங் செய்தபோது விபத்து.. ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்கு: யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிரடி கைது

காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர். ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தைச் சேர்ந்த யூடியூபர் டிடிஎப் வாசன். பிரபல பைக் ரைடர் . காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தனது டூவீலரில் வீலிங் சாகசம் செய்ய வாசன் முயன்றார். அப்போது தூக்கி வீசப்பட்டு சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் வாசனுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காஞ்சிபுரம் காரைப்பேட்டயில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. வாசன் போன்றோர் தேசிய நெடுஞ்சாலைகளில் ஸ்டண்ட் செய்கின்றேன் என்று கூறி பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் ஓட்டுவது மற்ற இளைஞர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், டிடிஎப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீசார், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை போலீஸார் கைது செய்தனர்.

The post வீலிங் செய்தபோது விபத்து.. ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்கு: யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: