கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கல்வெட்டு திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்.  கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன் ஏற்பாட்டில் ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி கட்சிக்கொடியேற்றி கல்வெட்டை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் தூய்மை பணியாளருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், பொதுகுழு உறுப்பினர் குணசேகரன், மாநில நிர்வாகிகள் பாஸ்கர் சுந்தரம், ஸ்டாலின், மாவட்ட நிர்வாகிகள் பகலவன், ரமேஷ், ரவி, ஒன்றிய நிர்வாகிகள் மஸ்தான், பரத்குமார், ஏசுரத்தினம், முத்துசாமி முன்னிலை வகித்தனர். தோக்கம்மூர் ஊராட்சியில், மாவட்ட விவசாய, தொழிலாளர் அணி, அமைப்பாளர் மணி ஏற்பாட்டில், முன்னாள் கவுன்சிலர் அங்கமுத்து, அமைப்புசாரா தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் விஜி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்று கல்வெட்டை திறந்து வைத்து 500 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதேபோல், பூவலை மற்றும் கொண்டமாநெல்லூர் ஊராட்சிகளில் திமுக நிர்வாகிகள் பார்த்தசாரதி, மஸ்தான், மகேந்திரன், தினகரன் ஏற்பாட்டில் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், சூரப்பூண்டி ஊராட்சி பணத்துமேட்டு கண்டிகை பகுதியில் மாணவர் அணி துணை அமைப்பாளர் வேணுகோபால், திமுக நிர்வாகி விக்டர் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்று கட்சிக்கொடியேற்றினார். பின்னர், 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர்கள் தமிழ் சாதிக், செங்கை தாமஸ், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: