டெல்லி: தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார் என டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். கூட்டணியில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனை இணைப்பது தொடர்பாக நேற்றிரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில்; வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
கூட்டணியில் பல கட்சிகள் இணையவுள்ளன; எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார். அதிமுகவில் ஓபிஎஸ் சேர்வதற்கு வாய்ப்பில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் இடமில்லை என்பதை பல முறை சொல்லிவிட்டேன். அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா சேர வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும்.
அதிமுக கூட்டணியில் டிடிவி இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி மழுப்பல். அதிமுக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைவாரா என்பதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிக்கவில்லை. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அமித்ஷா தலையிடவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ரகசியமாக இருந்தால்தான் அரசியல் கட்சிக்கு அந்தஸ்து உண்டு என்று கூறியுள்ளார்.
