×

வக்பு சட்டத்துக்கு எதிர்ப்பு மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்: ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டம் எர்ணாவூர், பாரத் நகர் அருகில் நடைபெற்றது. இதற்கு திருவொற்றியூர் வடக்கு பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல் தலைமை வகித்தார். கவுன்சிலர் ஜெயராமன், நிர்வாகிகள் சுந்தர்ராஜன், வெங்கடய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், ஒன்றிய பாஜ அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை முழங்கினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post வக்பு சட்டத்துக்கு எதிர்ப்பு மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvottriyur ,Marxist Communist Party ,Union BJP government ,Ernavur, Bharat Nagar ,North Area ,S. Kathirvel ,Councilor Jayaraman ,Communist ,Dinakaran ,
× RELATED தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய...