×

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாகப் பரப்பப்படும் செய்தி வதந்தி: தமிழ்நாடு அரசு தகவல் சார்பார்ப்பகம்

சென்னை: ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாகப் பரப்பப்படும் செய்தி வதந்தி என தமிழ்நாடு அரசு தகவல் சார்பார்ப்பகம் தெரிவித்துள்ளது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருமடங்கு (6 ரூபாய்) விலை உயர்த்தப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது.

இது வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சார்பார்ப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பால் பாக்கெட்டாகும்.

இதில் கூடுதலாக வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு உள்ளதுடன் கொழுப்புச் சத்து: 4.5% இதரச் சத்துக்கள்: 9% S.N.F. உயர்த்தப்பட்டு உள்ளது. கொழுப்புச் சத்து: 4.5% மற்றும் இதரச் சத்துக்கள்: 8.5% S.N.F கொண்ட பழைய ஆவின் கிரீன் மேஜிக் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் தற்போதும் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை. தவறான தகவலைப் பரப்பாதீர்! என குறிப்பிட்டுள்ளது.

Tags : Aavin ,Tamil Nadu Government Information Service ,Chennai ,
× RELATED பயண அட்டை தொலைந்துபோனால் இருப்பு...