×

திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவைகள்; “திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சாலை தெரு விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ரூ.16 கோடியில் நிறைவேற்றப்படும். மாநகராட்சி பாதளா சாக்கடை, சுத்திகரிப்பு நிலையம் ரூ.8 கோடியில் சீரமைக்கப்படும். இடும்பன்குளம், சண்முகா நதி ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும். புதிய நத்தம் கலை அறிவியல் கல்லூரியில் ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். மார்க்கம்பட்டியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தெழிற்சாலை ரூ.7 கோடியில் அமைக்கப்படும். கொடைக்கானல் மலை கிராமத்தில் 100 ஏக்கரில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சுற்றுலா முதலீட்டு பூங்கா அமைக்கப்படும். ஒட்டன்சத்திரத்தில் ரூ.17 கோடி செலவில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும். ஏற்றுமதியாகும் கண்வலி கிழங்குக்கு நியாயமான, நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Tags : Chief Minister ,MLA ,Dindigul district ,K. Stalin ,K. ,Stalin ,Dindigul ,Badala Sewage and ,Plant ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்