- எடப்பாடி பழனிசாமி
- தில்லி
- பா.ம.க.
- அய்யாட்மக்-
- பி.ஜே.பி கூட்டணி
- சென்னை
- முன்னாள்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- எஸ்.பி. வேலுமணி
- Palaniswami
- பாஜக
- OPS
- டி.டிவி தீனகரன்
சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்கனவே டெல்லி சென்ற நிலையில் பழனிசாமியும் செல்கிறார். கூட்டணியில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனை இணைப்பது தொடர்பாக பாஜக தலைமையுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை சேர்க்க பாஜக தலைவர்கள் தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்துசென்ற நிலையில் எடப்பாடி டெல்லி பயணம் செல்கிறார். டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாடு வந்த அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காத நிலையில் வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். சட்டமன்ற தேர்தலில் பாஜக 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கூட்டணியில் பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
