விதிகளை மீறி விளையாட்டுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பரிசு பொருட்கள், பணம், விருந்தோம்பல் என பலன்களை பெற்றதாகவும், இவற்றின் மதிப்பு 750 அமெரிக்க டாலருக்கு அதிகமாக இருந்தால் நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதியை மீறியதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. கூடவே தொடர்ந்து விசாரணயை தாமதப் படுத்தியதாகவும், அப்படி தாமதப்படுத்த ஆவணங்களை மறைத்ததாகவும், விளக்கங்கள் தர தாமதம் செய்ததாகவும் என கூடவே 2 குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டன. இந்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரித்த ஐசிசி குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. கூடவே தண்டனைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் துபாயில் நேற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) பொது மேலாளர்(மனித வளம் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு) அலெக்ஸ் மார்ஷல், ‘ சாமுவேல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடி உள்ளார். பல ஊழல் தடுப்பு பயிற்சி முகாம்களில் பங்கேற்றுள்ளார். எனவே கிரிக்கெட் விதிகள், ஊழல் தடுப்புச் சட்டங்கள், வீரரின் கடமைகள் குறித்து அவருக்கு தெரியும். இப்போது ஓய்வு பெற்றிருந்தாலும், செய்த குற்றங்களுக்காக அவர், அனைத்து வகையாக கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட 6ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்றார். ‘இந்த தடை 11-11-23 தேதியில் இருந்து அமலுக்கு வருவதாகவும், 11-11-29வரை அமலில் இருக்கும்’, என்றும் அலெக்ஸ் அறிவித்துள்ளார்.
The post ஊழல் தடுப்பு விதிகளை மீறிய: வெ.இண்டீஸ் வீரருக்கு 6 ஆண்டு தடை appeared first on Dinakaran.