விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்.5 முதல் செப்.8 வரை சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு

சென்னை: தொடர் விடுமுறை, முகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்.5 முதல் செப்.8 வரை பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள், முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு சென்னையில் இருந்து செப்டம்பர் 5ம் தேதி முதல் 8-ம் தேதி நான்கு நாட்களுக்கு முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னைக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 725 பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 190 பேருந்துகளும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் இருந்து திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு 125 பேருந்துகளும் மற்றும் வரும் 8-ம் தேதி அன்று விநாயகர் சதூர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு 120 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 100 பேருந்துகளும் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

The post விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்.5 முதல் செப்.8 வரை சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: