காஞ்சிபுரம், உத்திரமேரூர் பகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி: கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வீடு வீடாக சென்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2024ன்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட படிவங்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2024 பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி, பணிகளில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சிறப்பு முகாம்கள் மற்றும் அலுவலகங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது சரிபார்க்கப்பட்டு, விண்ணப்பங்கள் மீது இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் காஞ்சிபுரம் இறுதி செய்யப்பட்ட விண்ணப்பங்களை காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம், பெரிய காஞ்சிபுரம், மளிகை தெரு, உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பேட்டை, ஏகனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று சிறப்பு சுருக்கமுறை சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டார்.

ஆய்வினை தொடர்ந்து, வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, புறநோயாளிகளின் பதிவேட்டினை பார்வையிட்டு மருத்துவர்களிடம் மருந்துகளின் இருப்பு மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post காஞ்சிபுரம், உத்திரமேரூர் பகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: