வண்டலூர் ஊராட்சியில் ரூ33 லட்சத்தில் பேருந்து நிழற்குடை, சாலை பணிகள்: எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் ஊராட்சியில், வண்டலூர், ஓட்டேரி, ஓட்டேரி விரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், ஊராட்சிக்கு உட்பட்ட மு.க.ஸ்டாலின் பிரதான சாலையை ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ23 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பதற்காகவும் இதேபோல், வண்டலூர்- வாலாஜாபாத் நோக்கி செல்லும் மேம்பாலம் கீழ்பகுதியில் காஞ்சிபுரம் எம்பி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ10 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடைஅமைப்பதற்காகவும் பூமி பூஜை போடும் நிகழ்ச்சி மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.

இதில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு துணை பெரும் தலைவருமான ஆராமுதன் தலைமை தாங்கினார். வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்விவிஜயராஜ், திமுக கிளை செயலாளர்கள் சத்யநாராயணன், வாசு, காசி, லோகநாதன், குணசேகரன், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு, சாலை மற்றும் பேருந்து நிழற்குடைஅமைப்பதற்காக பூமி பூஜை போட்டு, அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினர். பின்னர், பணியை தொடங்கி வைத்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்டராகவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கெஜலட்சுமிசண்முகம், நெடுங்குன்றம் வனிதாசீனிவாசன், ஊரப்பாக்கம் பவானிகார்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வண்டலூர் குணசேகரன், காரணைப்புதுச்சேரி பத்மநாபன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தீபன்மாணிக்கம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியில், வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதாசத்யநாராயணன் நன்றி கூறினார்.

The post வண்டலூர் ஊராட்சியில் ரூ33 லட்சத்தில் பேருந்து நிழற்குடை, சாலை பணிகள்: எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: