கடைசி தேதி வரை காத்திருக்காமல் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்: விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

சென்னை: தமிழக அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ரூ.1,775 கோடியில் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என 2024-2025ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் 37 மாவட்டங்களில் குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேளாண்மை-உழவர் நலத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம் ஆகிய 14 வேளாண் பயிர்களுக்கும் வாழை, மரவள்ளி உள்ளிட்ட 12 தோட்டக்கலைப் பயிர்களுக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. ஜூன் 21ம் தேதி முதல் தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில் பதிவு மேற்கோள்ளப்பட்டு வருகிறது. குறுவை நெற்பயிரை வரும் 31ம் தேதி வரை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். எனவே, விவசாயிகள் அருகிலுள்ள பொது சேவை மையங்களிலோ தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களிலோ உரிய காப்பீட்டுக் கட்டணம் செலுத்தி கடைசி தேதி வரை காத்திருக்காமல் வரும் 31ம் தேதிக்குள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

The post கடைசி தேதி வரை காத்திருக்காமல் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்: விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: