மேலும் அந்த அறிக்கையில் நைஜீரியாவில் 24.8 லட்சம் குழந்தைகளும், இந்தியாவில் 14.4 லட்சம் குழந்தைகளும் ஒரு தடுப்பூசி கூட போடாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசு (8,82,000), எத்தியோப்பியா (7,82,000), சோமாலியா (7,10,000), சூடான் (6,27,000), இந்தோனேசியா (5,38,000), மற்றும் பிரேசில் (4,52,000) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம், உலகளவில் அனைத்து குழந்தைகளுக்கும் பதினொரு மூன்று – தடுப்பூசி சேர்க்கைகளை பரிந்துரைத்துள்ளது. இவை போலியோ, டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டுசிஸ், தட்டம்மை, சளி, ரூபெல்லா, காசநோய், ஹெபடைடிஸ் பி, ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி (Hib), ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா, ரோட்டா வைரஸ், வெரிசெல்லா ஆகியவற்றிற்கான தடுப்பூசிகள் ஆகும்.
The post ஒரு தடுப்பூசி கூட போடாமல் 14.4 லட்ச குழந்தைகள்.. உலகளவில் இந்தியாவிற்கு 2வது இடம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.
