ஒன்றிய பட்ஜெட் ஏழைகளுக்கு விரோதமானது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம்

மேற்குவங்கம்: ஒன்றிய பட்ஜெட் ஏழைகளுக்கு விரோதமானது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில சட்டசபை வளாகத்தில் 2024-25 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் வாசித்துள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில், ஒன்றிய பட்ஜெட் அரசியல் ரீதியான பாகுபாடுகளை கொண்டிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மேற்கு வங்காள மாநிலம் முற்றிலும் ஏமாற்றம் அடைந்துள்ளது. ஏழை மக்களின் நலனை கவனத்தில் எடுத்துக் கொள்வில்லை என மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

 

The post ஒன்றிய பட்ஜெட் ஏழைகளுக்கு விரோதமானது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: