தேவைப்பட்டால் தனித்துப்போட்டி; திரிணாமுல் அறிவிப்பால் மேற்குவங்கத்தில் குழப்பம்

கொல்கத்தா: தேவைப்பட்டால் தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்து இருப்பதால் மேற்குவங்கத்தில் இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன. இதில் கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்து விட்டது.

இதனால் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு திரிணாமுல் 4 தொகுதி மட்டுமே ஒதுக்கப்போவதாக தகவல் வெளியானதால் காங்கிரஸ் மக்களவை குழுத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கடும் விமர்சனம் செய்தார். இதனால் இரு கட்சிகள் இடையே பிரச்னை உருவாகி உள்ளது. இந்த நிலையில் தொகுதி பங்கீடு குறித்து திறந்த மனதுடன் இருப்பதாகவும், தேவைப்பட்டால் தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை குழுத்தலைவர் சுதீப் பந்தோபாத்யாயா தெரிவித்து உள்ளார்.

The post தேவைப்பட்டால் தனித்துப்போட்டி; திரிணாமுல் அறிவிப்பால் மேற்குவங்கத்தில் குழப்பம் appeared first on Dinakaran.

Related Stories: