விஜயகாந்த் மறைவையொட்டி சிலம்பக்கலை மாணவர்கள் அஞ்சலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலாம் கனவு இந்தியா இயக்கம் மற்றும் டாக்டர் ராஜேஷ் கலாம் கனவு இந்தியா கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை, காஞ்சி சிலம்பக்கலை பயிற்சி மையம் சார்பில், உடல் நலக்குறைவால் மரணமடைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு, வீரக்களையுடன் வீரவணக்கம் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதில், முன்னாள் கலாம் கனவு இந்தியா இயக்க தலைவர் ராஜேஷ் கலாம் தலைமை தாங்கினார். காஞ்சி சிலம்பக்கலை குரு குமார், தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின்போது, 100க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்துகொண்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு சிலம்பக்கலை மூலம் வீரவணக்கம் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

The post விஜயகாந்த் மறைவையொட்டி சிலம்பக்கலை மாணவர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: