சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் மண்டல அளவிலான பல்துறை ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும், சென்னை வடிநில பகுதியில் நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் ஆகிய துறைகளின் மூலம் நடந்து வரும் பணிகளின் தரம் முன்னேற்றம் குறித்து, மாவட்ட மற்றும் மண்டல கண்காணிப்பாளர்களை கொண்டு கள ஆய்வு செய்ய வேண்டும். இந்த பகுதிகளில் நடந்து வரும் பேரிடர் தணிப்பு பணிகள் அனைத்தும் 15.10.2024க்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், பருவ மழை தொடங்கும் முன்னரே மாநிலத்தின் அதிக பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிகளில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை தலைமைச் செயலாளர் பிறப்பித்தார்.
The post சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.