தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 20ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை 101.48 டிகிரி, தூத்துக்குடி 101.3 டிகிரி மற்றும் நாகப்பட்டினம் 100.94 டிகிரி என 4 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டது. அதேபோல் இன்றும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: