முருகேசனும், பாப்பையனும் துப்பாக்கியுடன் தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள் சஞ்ஜித்தின் உடலை மீட்டு தங்கள் கிராமத்திற்கு எடுத்துச்சென்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் நேற்று காலை மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான், காரமடை இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காரமடை போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள். சுட்டுக்கொல்லப்பட்ட சஞ்ஜித் மற்றும் முருகேசன், பாப்பையன் ஆகிய 3 பேரும் முயல் வேட்டைக்குத்தான் சென்றனரா? அல்லது சந்தன மரம் வெட்டி கடத்த முயன்றனரா? துப்பாக்கி எப்படி கிடைத்தது? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
The post கோவை அருகே பயங்கரம் முயல் வேட்டையின்போது தகராறு பழங்குடி வாலிபர் சுட்டுக்கொலை: 4 குண்டுகள் நெஞ்சை துளைத்த பரிதாபம் appeared first on Dinakaran.
