திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத நல்லிணக்க அமைதிப்பேரணி: சிறுவர்கள், பெண்கள் பங்கேற்பு

மதுரை: மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற என்ற பாஜ மற்றும் இந்துத்வா அமைப்புகளின் வலியுறுத்தலைக் கண்டித்து மதுரையில் நேற்று அமைதி நல்லிணக்கப் பேரணி நடைபெற்றது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற பாஜ மற்றும் இந்துத்வா அமைப்புகளின் வலியுறுத்தலைக் கண்டித்து மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் நேற்று மத நல்லிணக்க அமைதிப் பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் ெதாடங்கிய இப்பேரணி உலகத் தமிழ் சங்கம் வரை நடந்தது.

இதில் மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் கே.பாலபாரதி, விசிக மாநில துணைப் பொதுச்செயலாளர் கனியமுதன், மார்க்சிஸ்ட் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மா.கணேசன், மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், மக்கள் கண்காணிப்பாக்கம் வழக்கறிஞர் ஹென்றி திபேன், மமக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், சர்வ சமயங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர். இவர்கள், மத நல்லிணக்கம், சமூக அமைதி மற்றும் அனைவரின் வழிபாட்டு உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் இஸ்லாமிய பெண்களும் திரளாக பங்கேற்றனர்.

Related Stories: