தொடர்ந்து திண்டுக்கல்லில் ஜூலை 26, 27, 28 தேதிகளில் லீக் ஆட்டங்களும், ஜூலை 30ம் தேதி முதல் குவாலிபயரும், ஜூலை 31ம் தேதி எலிமினேட்டரும் நடைபெற இருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் டிஎன்பிஎல் தொடரின் 2வது குவாலிபயர் ஆக.2ம் தேதியும், இறுதி ஆட்டம் ஆக.4ம் தேதியும் நடைபெறும்.
டிஎன்பிஎல் தொடர் மூலம் அறிமுகமான சஞ்சய் யாதவ், சோனு யாதவ் உட்பட பலர் ஐபிஎல் தொடர்களில் வாய்ப்பு பெற்று கலக்கி வருகின்றனர். எனவே தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர்களிடையே டிஎன்பிஎல் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. கூடவே இந்திய அணி நட்சத்திரங்கள் ஆர்.அஷ்வின், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் (இருவரும் ஜிம்பாப்வே சென்றுள்ளனர்), அருண் கார்த்திக் என பலரும் களம் காண உள்ளனர். இன்று இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், அதிக முறை சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.
The post டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் சேலத்தில் இன்று தொடக்கம்: இது வரை சாம்பியன்கள் appeared first on Dinakaran.