மூன்றாவது வீரராக கேப்டன் சூர்யகுமார் யாதவும், நான்காவது வீரராக ரிங்கு சிங் அல்லது ரியான் பராக் விளையாட வாய்ப்பு உள்ளது. 5வது வீரராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், 6வது வீரராக ஆல்ரவுண்டர் சிவம் துபேவும் விளையாடலாம். 7வது வீரராக வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவார். 8வது வீரராக ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு வழங்கப்படும். இதனை தொடர்ந்து ஆர்ஸ்தீப் சிங், ஹர்சித் ராணா, மயங்க் யாதவ் என்று மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் விளையாட கூடும். இதில் மயங்க் யாதவ் கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக களம் இறங்கி மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். எனினும் அவருக்கு காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. தற்போது மீண்டும் முழு உடல் தகுதியை மயங்க் யாதவ் பெற்றிருப்பதால் அவர் பிளேயிங் லெவனில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.
இந்தியா பிளேயிங் லெவன் உத்தேச பட்டியல் வருமாறு:- 1. அபிஷேக் சர்மா, 2. சஞ்சு சாம்சன், 3. சூர்யகுமார் யாதவ், 4. ரிங்கு சிங் ரியான் பராக், 5. ஹர்திக் பாண்டியா, 6. சிவம் துபே, 7. வாஷிங்டன் சுந்தர், 8.ரவி பிஸ்னாய், 9.அர்ஸ்தீப் சிங், 10. ஹர்சித் ராணா, 11. மயங்க் யாதவ்.
The post குவாலியரில் நாளை வங்கதேசத்துடன் முதல் டி20 போட்டி: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக்சர்மா-சஞ்சுசாம்சன் களமிறங்க வாய்ப்பு appeared first on Dinakaran.