×
Saravana Stores

திருவாரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவாரூர்: திருவாரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.67.41 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் சொத்துக்கள் கண்டறியப்பட்டு நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருவாரூர் நகரில் மாவட்ட மைய நூலகம் அருகில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலம் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் ஆக்கிரமித்திருந்த கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஐநூற்று பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமான 1,68,528 சதுர அடி ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டது.

திருவாரூர், விஜயபுரம் அருள்மிகு கபிலேஸ்வரர் சுவாமி திருக்கோயிக்கு சொந்தமான திருவாரூர் நகர் மற்றும் வட்டம் வார்டு எண். 3 பிளாக் எண் 10. பழைய நகரளவை எண்- 396/1-7 புதிய நகரளவை எண்- 163-ல் சுமார் 61402 சதுர அடி இடம் திருக்கோயில் வசம் சுவாதினம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அந்நியர்கள் யாரும் அத்துமீறி பிரவேசிக்க கூடாது. மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.

The post திருவாரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Charities ,Tiruvarur ,Hindu Religious Charities Department ,Tamil Nadu ,
× RELATED கந்த சஷ்டி திருவிழா தமிழக அரசின் இந்து...