×

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து லோடு வேன் 2 லாரிகள் பயங்கர மோதல்: டிரைவர் சாவு ஒருவர் காயம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பைபாபாஸ் சாலையில் அடுத்தடுத்து லோடு வேன், 2 லாரிகள் மோதியதில் டிரைவர் பலியானார். 2 டிரைவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் ஆட்டோ மொபைல்ஸ் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி இன்று அதிகாலை 7 மணியளவில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் வந்தபோது, டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் பின்னால் வந்த லோடு வேன், லாரி அடுத்தடுத்து மோதின. இந்த விபத்தில் ஆட்டோ மொபைல்ஸ் உதிர்பாகங்கள் ஏற்றி கொண்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி சிப்காட் பகுதிக்கு சென்ற பூந்தமல்லி நசரப்பேட்டை பகுதியை சேர்ந்த டிரைவர் நாகராஜ் (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். லோடு வேன், லாரி டிரைவர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாகராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்த ஐதராபாத்தை சேர்ந்த டிரைவர் லட்சுமணன் (48) என்பவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்து நடந்த இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியில் சிக்கிய லோடு வேனை பிரித்து எடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.

The post கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து லோடு வேன் 2 லாரிகள் பயங்கர மோதல்: டிரைவர் சாவு ஒருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi bypass road ,Kummidipoondi ,Kummidipoondi Bypapass Road ,Chennai-Kolkata National Highway ,Kummidipoondi Bypass ,Dinakaran ,
× RELATED பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில்...