சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. வனத்துறை டெண்டர் கோரிய நிலையில் அடுத்த 3 மாதத்திற்குள் பணிகள் தொடங்கும் என தகவல். இயற்கைக்கு ஏற்ற பொருட்கள் மூலம் நடைபாதை அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல், தாவரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் வனத்துறை முடிவு செய்துள்ளது
ஆண்டு முழுவதும் ஈரப்பதம் இருக்கும், நீர் இருக்கும் நிலத்தைத்தான் சதுப்பு நிலம் என்கிறார்கள். சிறு தாவரங்களும் நீர் வாழ் விலங்குகளுக்கும் இது அடைக்கலம் தருகிறது. உவர்ப்பு மற்றும் நன்னீர் என இருவகையான சதுப்பு நிலங்கள் உண்டு.
பள்ளிக்கரணையில் இருப்பது நன்னீர் சதுப்பு நிலமாகும். கடலில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்திருக்கிறது.சென்னை நகரத்தின் முக்கியமான வெள்ளநீர் வடிகாலாக பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்துள்ளது. உள்நாட்டுப் பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் இடமாகவும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்துள்ளது.
பள்ளிக்கரணையில் கடந்த 1965-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 5,500 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் பரந்து விரிந்து இருந்தது. சென்னையின் நகரமயமாக்கலால் சிறிது சிறிதாக சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் முளைத்ததால் தற்போது வெறும் 1,500 ஹெக்டேர் சதுப்பு நிலமாக குறுகிப்போனது.
இந்நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இயற்கைக்கு ஏற்ற பொருட்கள் மூலம் நடைபாதை அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல், தாவரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் வனத்துறை முடிவு செய்துள்ளது.
The post பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க வனத்துறை முடிவு appeared first on Dinakaran.