திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 1.20 கோடி காணிக்கை

திருத்தணி : திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1 கோடியே 20 லட்சத்தி 11 ஆயிரத்து 895 பக்தர்களிடமிருந்து காணிக்கை பெறப்பட்டது. திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகும். இக்கோயிலுடன் சுமார் 26 உப கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் உண்டியல் காணிக்கை மற்றும் திருப்பணி காணிக்கை அனைத்தையும் கடந்த 39நாட்களில் வசூலானது. இதில், ரூ.1,20,11,895, தங்கம் 768 கிராம், வெள்ளி 11,705 கிராம் காணிக்கையை மலைக்கோயில் வளாகத்தில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், உறுப்பினர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ் பாபு, மு. நாகன் கோயில் மண்டல ஆணையர் மற்றும் துணை ஆணையர் மேற்பார்வையில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவன அமைப்புகளைச் சேர்ந்த பக்தர்கள் மூலம் காணிக்கைகளைப் பிரித்து என்னபட்டன. இதில் வரப்பெற்ற காணிக்கைபணத்தை நேற்று வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. மேலும், தங்கம் மற்றும் வெள்ளி கோயில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது.

The post திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 1.20 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: