இதுகுறித்து லெட்சுமணன் நேற்று அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சரவணன்(19) மற்றும் தூத்துக்குடி பி.என்.டி.காலனி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் புவனேஷ்குமார்(19) ஆகிய இருவரும் லெட்சுமணன் வீட்டுக்குள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் எஸ்ஐ முகிலரசன் மற்றும் போலீசார் சரவணன், புவனேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த, திருடப்பட்ட ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் மற்றும் ரூ.1,240 பணத்தை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட சரவணன் மீது ஏற்கெனவே தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 13 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையம் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும் என மொத்தம் 15 வழக்குகளும், புவனேஷ்குமார் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 12 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 14 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post தூத்துக்குடியில் பைக், பணம் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.