திருவாரூரில் ஆக்கிரமிப்பில் இருந்த கபிலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

திருவாரூர்: திருவாரூரில் ஆக்கிரமிப்பில் இருந்த கபிலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் மீட்க்கப்பட்டுள்ளது. கபிலேஸ்வரர் ஆலயத்துக்கு சொந்தமான 6,000 சதுரடி கொண்ட நிலம் தனியாரால் ஆகிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு செய்த 6,000 சதுரடி கொண்ட ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்த நிலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் குமரேசன் தலைமையில் அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது மீண்டும் கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

The post திருவாரூரில் ஆக்கிரமிப்பில் இருந்த கபிலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: