அமெரிக்க அதிபரை கவர்ந்த 12 வயது சிறுமி யார்?.. வரவேற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்றிரவு ெடல்லி வந்து சேர்ந்தார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்றவர்களில் சிறுமி ஒருவரும் இருந்தார். அந்த சிறுமியிடம் ஜோ பைடன் சிறிது நேரம் பேசியது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. யார் அந்த 12 வயது சிறுமி? என்று இந்திய ஊடகங்களில் விவாதங்கள் சென்றன.

தொடர் விசாரணையில், அந்த சிறுமி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியின் மகள் மாயா என்பது தெரியவந்தது. ஏற்கனவே கார்செட்டி இந்தியாவில் பணியாற்றிய காலத்தில் அவரது மகள் மாயாவின் படங்கள் வெளியாகின. இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருக்கும் எரிக் கார்செட்டி, 2013 முதல் 2022 வரை லாஸ் ஏஞ்சல்ஸின் மேயராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்க அதிபரை கவர்ந்த 12 வயது சிறுமி யார்?.. வரவேற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: