தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்துக்குள் மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாத அவலம்

தஞ்சாவூர், மே 30: தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் செல்லும் சாய்தளத்தின் முன்பு பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திச் செல்வதால் உள்ளே செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் செல்வதற்காக நுழைவாயில் முன் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியில் தான் மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து செல்வார்கள்.

எனவே, அந்த சாய்தளத்தின் முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் அவர்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவட்டு செல்கின்றனர். இனதால் அங்கு வரும் மாற்றுத்திறனாளிகள் உள்ளே செல்ல வழியில்லாமல் மிகவும் சிமரப்பட்டு படிகளில் ஏறிச்செல்கின்றனர். அதேபோல், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே ஒரு சக்கர நாற்காலி மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் பயன்படுத்துகிறார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. இந்நிலையில் இந்த சாய்தளத்தின் முன் இங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடாது எனவும், மீறி நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்துக்குள் மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாத அவலம் appeared first on Dinakaran.

Related Stories: