டென்னிஸ் பந்தில் ‘ஸ்டிரீட் பாய்ஸ்’ விளையாடும் ஐஎஸ்பிஎல் டி10 தொடர் மும்பையில் இன்று தொடக்கம்

மும்பை: தெருவில் விளையாடும் இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் இந்தியன் ஸ்டிரீட் பிரிமீயர் லீக் (ஐஎஸ்பிஎல்) கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் தலா 10 ஓவர்களை கொண்ட டி10 ஆட்டமாக நடத்தப்படுகிறது. கிரிக்கெட் பந்துக்கு பதிலாக டென்னிஸ் பந்து பயன்படுத்தப்படும். சென்னை சிங்கம்ஸ் உட்பட 6 அணிகள் களமிறங்குகின்றன.

இந்த 6 அணிகளின் உரிமையாளர்களாக தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளனர். இன்று முதல் மார்ச் 13ம் தேதி வரை லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். மார்ச் 14ல் அரையிறுதி, மார்ச் 15ல் பைனல் நடைபெற உள்ளது. மும்பை அருகே தானேவில் உள்ள தாதோஜி கொண்டதேவ் விளையாட்டு அரங்கில் இரவில் நடைபெறும் ஆட்டங்கள் சோனி ஸ்போர்ட்சில் ஒளிரப்பாகும். இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் நகர் கே வீர் – மஜ்ஹி மும்பை அணிகள் மோதுகின்றன.

The post டென்னிஸ் பந்தில் ‘ஸ்டிரீட் பாய்ஸ்’ விளையாடும் ஐஎஸ்பிஎல் டி10 தொடர் மும்பையில் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: