தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் 20 நாளில் ரூ.1,470 கோடிக்கு மது விற்பனை

திருமலை: தெலங்கானாவில் கடந்த 20 நாட்களில் ரூ.1,470 கோடிக்கு மது விற்பனையானது.தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 30ம்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், தேசிய தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஒருசிலர் தங்கள் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த மது வழங்கினர். மேலும் தேர்தல் வாக்குப்பதிவு அன்று மது அருந்த தற்போதிலிருந்தே ஏராளமானோர் மதுவை வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். இதனால் பீர் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 1ம்தேதி முதல் 20ம்தேதி வரை சுமார் 22 லட்சம் பீர் கேஸ்கள் விற்பனையாகியுள்ளன.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் 12 லட்சம் கேஸ்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. இதனால் கடந்த 1ம்தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை ரூ. 1,470 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் ரூ..1,260 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் இன்று மாலை 5 மணி முதல் நவம்பர் 30ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. தேர்தலின்போது அதிக அளவில் மதுபானங்களை சப்ளை செய்வதற்காக முன் கூட்டியே வாங்கி இருப்பு வைத்துள்ளதால் இந்த விற்பனை சதவீதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும் தேர்தலுக்கு மது இருப்பு வைப்பதை தடுக்க போலீசார் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.117 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் 20 நாளில் ரூ.1,470 கோடிக்கு மது விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: