நேற்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.6,705க்கும், ஒரு சவரன் ரூ.53,640க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 960 ரூபாயும் ஏற்றம் கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6,825க்கும் , 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 54,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 3 ரூபார் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 95க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post ஒரே நாளில் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600க்கு விற்பனை appeared first on Dinakaran.