சேலம்: முகூர்த்தம் இல்லாததால் சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி கிலோ ரூ280ஆக சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டுமல்லி, முல்லைபூ, ஜாதிமல்லி, கனகாம்பரம், காக்கட்டான், அரளி, சம்பங்கி, சாமந்தி உள்பட பல ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி பூ மார்க்கெட் உள்பட பல பகுதிகளுக்கு விற்பனை செல்கிறது. கடந்த வாரம் தொடர் முகூர்த்தம் காரணமாக பூக்களின் தேவை அதிகரித்தது. அதனால் அப்போது பூக்களின் விலை அதிகரித்து இருந்தது.
தற்போது முகூர்த்தம் இல்லாததால் அனைத்து பூக்களின் விலையும் சரிந்துள்ளது. நேற்று ஒரு கிலோ குண்டுமல்லி ரூ280ஆக சரிந்தது. முல்லை ரூ240, ஜாதிமல்லி ரூ260, காக்கட்டான் ரூ200, கலர்காக்கட்டான் ரூ140, மலைகாக்கட்டான் ரூ200, அரளி ரூ70, வெள்ளை அரளி ரூ200, மஞ்சள் அரளி ரூ200, செவ்வரளி ரூ400, ஐ.செவ்வரளி ரூ90, நந்தியாவட்டம் ரூ30, சின்ன நந்தியாவட்டம் ரூ60, சம்பங்கி ரூ50, சாதா சம்பங்கி ரூ100, சாமந்தி ரூ180 என விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post குண்டுமல்லி விலை சரிவு: கிலோ ரூ280 ஆனது appeared first on Dinakaran.