தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தலைவராக அப்துல்சமத் எம்எல்ஏ தேர்வு

சென்னை: தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தலைவராக அப்துல்சமத் எம்எல்ஏ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூட்ட அரங்கில் நேற்று மாலை 4 மணியளவில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத் துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவராக பி.அப்துல்சமத் எம்எல்ஏ ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுபற்றிய அறிவிப்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தலைவராக அப்துல்சமத் எம்எல்ஏ தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: