தமிழ்நாட்டில் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 7,164 மெகாவாட்டாக அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 7,164 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என ஒன்றிய எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இந்த ஆண்டு அக்டோபர் நிலவரப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மின் உற்பத்தித் திறன் விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் அதிகத் திறனில் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின் நிலையங்கள் மூலம் 6,649 மெகாவாட், கட்டிட மேற்கூரைகளில் உள்ள சோலார் தகடுகள் மூலம் 449 மெகாவாட், விவசாய நிலங்கள் மூலம் 65.86 மெகாவாட் என ஒட்டுமொத்தமாக சூரியசக்தி மின் உற்பத்தித் திறன் 7,164 மெகாவாட்டாக உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த நான்கு மாதங்களில் 263 மெகாவாட் அளவிலான அதிகத் திறன் கொண்ட சூரியமின்சக்தி நிலையங்கள் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனில் குஜராத் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாமிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாட்டில் சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 7,164 மெகாவாட்டாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: